மாதவரம் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் கட்டுவதற்கு வசதியாக, மாதவரம் பால் பண்ணையில் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், திங்கள்கிழமை காலை 8 மணி முதல் செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழாய் நீர் விநியோகம் இருக்காது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 24ம் தேதி மாலை முதல் இப்பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.